பேயாட்டம் போட்ட தில்லுக்கு துட்டு பார்ட்களின் நீட்சியே இந்த DD returns
காதலியை கைப்பிடிக்க நினைக்கிற சந்தானம். காதலி ஒரு பிரச்சனையில் மாட்ட, அவரைக்காப்பாற்ற ஒரு பங்க்ளாவிற்குள் செல்கிறார். அந்தப் பங்களாவில் பேய்கள் இருக்கின்றன. சொல்லும் போது, “என்னப்பா ரொம்ப பழைய கதைன்னு தோணுதா? ஆனா திரைக்கதை இதை இப்படிச் சொல்லல..வேறமாதிரி சொல்லியிருக்கு.. அதற்கு முன் நடிகர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்
நிஜமாக இது சந்தானம் ரிட்டர்ன் என்றே சொல்லவேண்டும்..மனிதர் Full எனர்ஜியோடு களம் இறங்கியிருக்கிறார். பேய் கேம்களில் அவர் அடிக்கிற காமெடி பன்ச்கள் எல்லாம் அதகளம். கூடவே கிங்ஸ்ட்லி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், தீனா, முனிஷ்காந்த், பிபின், சேது, தங்கதுரை என பெருங்கூட்டமே நடித்துள்ளது. ஒவ்வொரு கேரக்டரும் போட்டிபோட்டு காமெடி செய்துள்ளது. தீனாவை வைத்து பக்காவாக காமெடி செய்த படம் இதுவாகத்தான் இருக்கும். கடிஜோக் இல்லாமலே தங்கதுரை ஸ்கோர் பண்ணுகிறார். கதவின் மேல் நின்று மொட்டை ராஜேந்திரன் செய்யும் அலப்பறை இருக்கே…😂😂 டே டே டே டேய்..என பெப்சி விஜயன் ஓடும் காட்சியில் தியேட்டரில் அட்டகாசமான சிரிப்பலை. நாயகி சுரபி கதையை நகர்த்த பயன்படுத்தப்பட்டாலும் அவரும் கிடைக்கிற கேப்-ல் கோல் போடுகிறார். பேய்களாக வரும் மாசூம் சங்கர், பிரதீப் ராம் உள்ளிட்ட குழு அசத்தல்
தீபக் குமாரின் ஒளிப்பதிவு பேய்பட மூட்-ஐ பக்காவாக செட் செய்துள்ளது. க்ளைமாக்ஸில் லைட்டிங் எல்லாம் சிறப்பான செய்கை. ஆப்ரோவின் பின்னணி இசை திரைக்கதைக்கு இழுக்குச் செய்யவில்லை
இதுதான் படம்..இப்படித்தான் இது பயணிக்கும் என்று ரசிகனுக்குள் மைண்ட் செட் செய்யும் திரைக்கதை இப்படத்திற்கு வாய்த்திருக்கிறது. படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலே படத்தோடு நாம் கனெக்ட் ஆகிவிடுகிறோம். எல்லாக் கேரக்டர்களும் ஒரே இடத்தில் அசம்பிள் ஆகவேண்டும். ஆனால் அதில் லாஜிக் சரியாக இருக்கணும் என மெனக்கெட்டு எழுதியுள்ளனர் சந்தானத்தின் திரைக்கதை டீம். முன்பாதி படம் முடியும் போது ஒரு ok va ஆன படம் என்றே நினைத்தோம். But செகண்ட் ஹால்ப் படத்தை டபுள் ok சொல்ல வைத்துவிட்டது
இந்த வாரம் பந்தயம் அடிக்கப்போவது இந்தக் குதிரை தான். இயக்குநர் ப்ரேம் ஆனந்த் உள்பட படக்குழுவிற்கு வாழ்த்துகள்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்