முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “தர்பார்”. பொங்கல் விடுமுறைக்கு இரு தினங்கள் முன்பாகவே வெளியான இப்படத்தின் வசூல் ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரம் வரை நிலையாக இருந்ததாகவும், பின்னர் தான் அதன் வசூல் குறைந்தது என்றும் கூறப்பட்டது. இதனால் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கும் இப்படம் நல்ல லாபம் கொடுத்தது என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது திடீரென்று சில விநியோகஸ்தர்கள் படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று போர்க்கொடி தூக்கி இருப்பதன் பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல் இருப்பதாக கருதப்படுகிறது. இதே விசயத்தினை மாற்று முறையில் கூறுபவர்களும் இருக்கிறார்கள். படம் வெளியாகி பெரிய வசூலைக் குவிக்கத் தவறியதால் தான், பரபரப்பைக் கிளப்ப ரஜினி பெரியார் பற்றி பேசினார் என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பது சாமானிய மக்களுக்குத் தெளிவாகப் புரியவில்லை என்றாலும் கண்டிப்பாக “தர்பார்” படத்தின் பின்னால் ஏதோவொரு அரசியல் இருக்கிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது.