முதல்வரையே கலங்க வைக்கும் ஒரு முக்கியக் குற்றவாளியை ஒரு சாதாரண கான்ஸ்டபிள் எப்படி கோர்ட்டில் கொண்டு ஒப்படைக்கிறார் என்ற லைன் தான் கஸ்டடி
ஹீரோ நாக சைதன்யா ஒரு நேர்மையான கான்ஸ்டபிள். அவருக்கு ஒரு காதலி. காதலியை கைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வரும் போது நாட்டின் மிக முக்கிய குற்றாவாளியான அரவிந்த்சாமிக்கும் சிபிஐ ஆபிசர் சம்பத்திற்கும் ரோட்டில் சண்டை நடக்கிறது. நாக சைதன்யா இருவரையும் யார் என தெரியாமல் கைது செய்கிறார். சம்பத் சைதன்யாவிற்கு தன்னையும் அரவிந்த சாமியையும் புரிய வைக்கிறார். உண்மையை உணரும் நாக சைதன்யாவுக்கு அடுத்தடுத்து வருகிறது சிக்கல். சிக்கலில் எப்படி விடுபட்டு குற்றவாளியையும் குற்றத்திற்கு காரணமானவர்களையும் சபையேற்றினார் என்பதே மீதிக்கதை
நாக சைதன்யா முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படுவேனா என்கிறது. நல்ல மாஸ் ஹீரோவிற்கான மொமெண்ட்ஸ் கதையில் இருந்தும் தனது சுமாரான நடிப்பால் நீர்த்துப் போகச்செய்கிறார். அரவிந்த சாமி அசால்டாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். சரத்குமார் பிரியாமணி கேரக்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாயகி கீர்த்தி ஷெட்டி ஓகே ரகம். ராம்கி, ஒய்ஜி மகந்தேரன், நம்மூர் ஜீவா ஆகியோர் மின்னெல மறைந்து போகிறார்கள்
இளையராஜா & யுவன் கூட்டணியில் பின்னணி இசை மட்டும் தெறிக்கிறது. பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியுள்ளது. ட்ரைன் பைட் அதற்கு முந்தைய பைட் இரண்டிலும் லைட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் மாத்தேவ் (உமா மகேஷ்வரன்) தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவரது அபார உழைப்பு தெரிகிறது
ஒரு மாஸ் மெட்டிரியலுக்கான ஒன்லைனை இடது கையால் டீல் செய்வது போல் டீல் செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. கொஞ்சமும் மெனக்கெடல் அற்ற திரைக்கதையும் லாஜிக் ஓட்டைகள் நிறைந்த காட்சிகளும் படத்தோடு நம்மை ஒட்டவிடவில்லை.
இன்னும் மேலதிக முனைப்பு காட்டியிருந்தால் இரண்டரை மணி நேரம் கஸ்டடியில் சந்தோஷமாக இருந்திருக்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Custody #கஸ்டடி