Tamil Movie Ads News and Videos Portal

NC22 தற்போது ‘கஸ்டடி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘NC 22’. நாக சைதன்யா இருக்கும்படியான தீவிரமான ப்ரீ லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றதுடன் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

நாக சைதன்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ப்ரீ லுக்குடன், படத்தின் டைட்டிலை முதல் பார்வையுடன் தற்போது வெளியிட்டுள்ளனர். வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் ‘கஸ்டடி’ என படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.’நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்’ என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்த பைலிங்குவல் திரைப்படம் அதிக அளவிலான தயாரிப்பு மதிப்பீடுகளைக் கொண்டது. மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.