இந்திய சினிமாவில் இப்பொழுது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற மற்றொரு வேடிக்கையான அரங்கேறி வருகிறது. அது முன்னணியில் இருக்கும் நடிகைகள் அனைவரும் தனக்கு சக நடிகர்களில் யார் மீது க்ரஷ் என்பதை வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள். அதன்படி தன்ஷிகா, சுனைனா, ரித்விகா, ஜான்வி கபூர் முறையே சிம்பு, ஹ்ருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோர் மீது தங்களுக்கு க்ரஷ்
இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த வரிசையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் அவரின் ஜோடியாக நடித்திருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷனிடமும் இதே கேள்வியை முன் வைத்தார் ரசிகர் ஒருவர். அதற்குப் பதிலளித்த கல்யாணி தனக்கு சிறுவயது முதலே ‘சூப்பர் மேன்’ மீது தான் க்ரஷ் இருக்கிறது என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.