இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ் நிறுவியுள்ளார்.
திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் முதல் ஆல்பம் பாடலாக Criminal Crush வெளியாகிறது. இப்பாடலை Vels Film International நிறுவனம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி” படத்தின் இணை இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச. ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர்.