உலகெங்கும் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் சில நம்பிக்கையான சிகச்சை முறைகளும் கண்ணில் தென்பட்டு மனதை மகிழ்விக்கின்றன. அதில் முக்கியமானது டாக்டர் சங்கர் அவர்கள் பரித்துரைத்துள்ள அங்குபங்சர் முறையிலான மருத்துவம்.
உடலில் இருக்கும் சில சக்தி புள்ளிகளை அக்குபங்சர் மூலம் தூண்டி விடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதகரிக்கச் செய்ய முடியும் என்பதை மிகச்சிறப்பாக நிரூப்பித்து இருக்கிறார் டாக்டர் சங்கர். இவரின் அக்குபங்சர் முறையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றமும் குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
கொரோனா நோயாளிகளை குணப்படுத்த இன்னமும் அதிகாரப்பூர்வ ஆங்கில மருந்து உருவாக்கப்படாத சூழலில் கோவிட்-19 வைரஸுக்கு கிடுக்குப்பிடி கொடுக்கும் அளவில் ஒரு அற்புத சிகச்சையை தன் அனுபவ ஆராய்ச்சிகளால் கண்டறிந்துள்ளார் டாக்டர் எம்.என். சங்கர் சென்னை தி.நகரில் ஹைக்யூர் அங்குபங்சர் சிகச்சை மையம் நடத்தி வருபவரும் complementary medical academy of acupuncture science என்ற அமைப்பின் நிறுவனருமான டாக்டர் எம்.என். சங்கர் சுமார் 30 வருடங்களாக அக்குபங்சர் சிகச்சைகளை வழங்கி வருகிறார்.
அக்குபங்சர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க முடியும் என்பதை அறிமுகப்படுத்தும் விழா ஒன்று சென்னையில் சோசியல் டிஸ்டென்ஸோடு நடைபெற்றது. விழாவில் சிலருக்கு அங்கேயே அக்குபங்சர் சிகச்சை அளிக்கப்பட்டது. சிகச்சை எடுத்துக்கொண்டவர்கள் உடலில் ஓர் பாசிட்டிவ் எனர்ஜியை உணர்வதாக தெரிவித்தார்கள். சீனாவில் இந்த அக்கு பங்சர் முறையை எல்லா இடத்திலும் பயன்படுத்தி வந்தார்கள். கொரோனாவை வென்றார்கள் என்பதும் மருத்துவர் சொல்லும் மகத்தான வார்த்தை. கையில் வெண்ணை இருப்பதை மறந்து நாம் ஏன் மருந்தில்லை என்று விண்ணைக் காட்ட வேண்டும்?
டாக்டர் எம்.என் சங்கர் அவர்களின் இந்த மிக முக்கியமான முன்னெடுப்பை நடிகர்கள் சிவகுமார் மற்றும் பார்த்திபன் ஆடியோ வடிவில் செய்தி அனுப்பி தங்களின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். நாமும் தெரிவிப்போம்