Tamil Movie Ads News and Videos Portal

கொரோனா! யாருடா மக்கள்?

கூட்டமாக ஊருக்கு வருவதை விட இருக்கும் இடத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதே ஆகச்சிறந்த வழி. பிரதமரும் முதல்வரும் கெஞ்சி கேட்கும் தொனியில் சொல்லியும் நம் மக்கள் கூட்டம் கூடுவதைக் குறைக்கவில்லை. பட்டால் தான் உரைக்கும் என்றால் படுவதின் அளவு மிகப்பெரியதாக இருக்கும்…அதனால் தயவுசெய்து தனித்திருத்தலை உறுதி செய்யுங்கள்..அப்போது தான் கொரோனா நமக்கு இறுதி செய்யாது?…

சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று புலம்புவர்களைப் பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது. பத்துநாள் ருசியாக சாப்பிட முடியாவிட்டாலும் பசியாறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. வயிறை விட உயிர் முக்கியம்..புரிந்து கொண்டு சுய கட்டப்பாட்டால் மட்டும் தான் இந்தப்போரை நாம் வெல்ல முடியும்.

நேற்றைய கோயம்பேடு விவகாரத்தில் அரசு சற்று சறுக்கி இருந்தாலும் அதைக் குறைச் சொல்லிக்கொண்டு நேரத்தைக் கடத்தாமல் இருக்கும் நேரத்தை பாதுகாப்பாக கழிப்போம்..பெரும் பணக்கார நாடான இத்தாலிக்கே இப்படியொரு நிலமை என்றால் நம் நாட்டிற்கு அந்த நிலை வந்தால் அவ்வளவு தான்! யோசித்துப் பார்க்கவே கொலை நடுங்குகிறது..