கண்ணுக்கு தெரியாத கிருமி யுத்தத்தால் உலகம் பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடிப்படைத் தேவைகளான காய்கறி மற்றும் உணவு போன்றவற்றை வாங்குவதற்காக அவ்வபோது மக்கள் வெளியே வந்து செல்கிறார்கள். ஆனால் பத்து கடைகள் திறந்திருக்கும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு கதைகள் மட்டுமே திறந்திருப்பதால் பல மக்களுக்கு தேவையானப் பொருட்கள் கிடைப்பதில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் ஆன் லைன் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நடிகையான சினேகா உல்லால் தன் குடும்பத்தின் மளிகை மற்றும் காய்கறி தேவைக்காக யோசித்துக் கொண்டிருந்த போது, வீட்டுக்கே வந்து மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்கிறோம் என்கின்ற ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து அதில் 25,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பொருள் வராத நிலையில் தான், அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதனை உணர்ந்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. மக்கள் அந்த கும்பலிடம் கவனமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.