கொரோனா வைரஸின் பாதிப்பு கிட்டத்தட்ட 108 நாடுகளில் பரவி இருக்கும் நிலையில் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல தொழில்களை முடக்கி வரும் கொரோனாவின் பிடியில் சினிமா உலகமும் தப்பவில்லை. தற்போது விக்ரம் நடித்து வரும் “கோப்ரா” படத்தின் படப்பிடிப்பு ரஷ்ய நாடுகளில் நடந்துவருகிறது.
கொரோனா பாதிப்பு எதிரொலியால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, படக்குழு இந்தியா திரும்ப இருக்கின்றனர். இது குறித்து படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து டிவிட்டரில், “கோப்ராவை தாக்கிய கொரோனா; கொரோனா பாதிப்பினாலும் இந்திய அரசாங்கம் பயணம் செய்வதற்கு தடை விதித்திருப்பதையும் கருத்தில் கொண்டு, படப்பிடிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு இந்தியா திரும்புகிறோம். போங்கையா.. நீங்களும் ஒங்கக் கொரோனாவும்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.