பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் மகன் தந்தையைப் போல் சினிமா சார்ந்த தொழில்களில் அதிக ஈடுபாடு இல்லாதவர். இருப்பினும் அரசியல் மற்றும் பொதுநலம் சார்ந்த விசயங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்படுபவர். அவர் சென்ற மாதம் 18ம் தேதி லண்டனில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார். திரும்பியதில் இருந்து இன்று வரை தனித்த அறையில் தன்னை தனிமைப்படுத்து வருகிறார்.
இது தொடர்பாக ஒரு வீடியோவை மணிரத்னத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாஷினி பதிவேற்றியுள்ளார். இதில் பேசியிருக்கும் மணிரத்னத்தின் மகன் நந்தன், “லண்டனில் இருந்து வந்ததில் இருந்து 10 அடி தூரத்தில் தான் நபர்களோடு தொடர்பில் இருக்கிறேன். எனக்கான உணவைத் தனியாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அவர்கள் கை கழுவிக் கொள்வார்கள். நானும் அந்த உணவை எடுத்துக் கொண்டு கை கழுவிவிடுவேன். தனிமை துயரமானது தான். ஆனால் நம் உள்ளத்துக்கு நெருக்கமானவர்களின் பாதுகாப்பிற்காக நாம் இந்த தனிமையை கடைபிடித்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.