Tamil Movie Ads News and Videos Portal

மீண்டும் கிறிஸ்துவ அடையாளத்துடன் தளபதி

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த பிரமுகரான ஹெச்.ராஜா முதன்முறையாக் நடிகர் விஜயின் உண்மையான பெயர் ஜோசப் என்றும் அவர் தன் கிறிஸ்துவ அடையாளத்தை மறைத்து தமிழ்ப்படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று மிகவும் தரக்குறைவான விமர்சனத்தை தொடங்கி வைத்தார். இந்த விமர்சனம் வைக்கப்பட்டதில் இருந்து நடிகர் விஜய் அடுத்து தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்கள் கிறிஸ்துவ கதாபாத்திரமாக அமையும்படி பார்த்துக் கொண்டார்.

சென்ற ஆண்டு வெளியான ‘பிகில்’ படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது போல் தற்போது மாஸ்டர் படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர், “ஜான் துரைராஜ்” என்று தெரிய வந்துள்ளது. மேலும் விஜய் செயிண்ட் ஜெஃப்ரே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளராகவும், மாணவர் நல அமைப்பின் முதல்வராகவும் நடித்திருக்கிறார் என்கின்ற செய்தி வெளியாகியுள்ளது.