Tamil Movie Ads News and Videos Portal

ஹ்ருத்திக் ரோஷனை மிரட்டிய தளபதி விஜய்

- Advertisement -

பாலிவுட் திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன். இவர் மிகச் சிறந்த டான்ஸரும் கூட. இவரின் நடனத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஹிருத்திக் தென்னிந்திய நடிகர்கள் என்னையே நடனத்தில் மிரட்டுகின்றனர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஹிருத்திக் ரோஷனிடம் உங்களுக்குப் பிடித்த தென்னிந்திய நடிகர் யார்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஷன், “என் நடனத்திற்காக என்னை பலரும் பாராட்டுவார்கள். கஷ்டமான ஸ்டெப்புகளைக் கூட எளிதாக ஆடுவதாக கூறுவார்கள். ஆனால் விஜய், அல்லு அர்ஜுன் போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடனத்தில் என்னைத் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போலத் தெரிகிறது. அவர்கள் இருவரின் நடனமும் என்னை மிரட்டுகிறது. அந்த நடனத்திற்கு நான் என்றுமே ரசிகன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.