Tamil Movie Ads News and Videos Portal

ஒடிடிக்கு வருகிறது சுந்தர்.சியி. ‘காஃபி வித் காதல்’!

இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய இந்த தமிழ் ரோம்-காம் திரைப்படம் டிசம்பர் 9, 2022 அன்று ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்ஸ் காமெடி திரைப்படமான இந்த ‘காஃபி வித் காதல்’ ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

இயக்குநர் சுந்தர் சி கூறுகையில்,

“காபி வித் காதல்” ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். சில சமயங்களில் நமது பெற்றோர்கள் நமது தனித்திறமைகளை உணரத் தவறிய நேரங்கள் உண்டு, ஆனால் நம் உடன்பிறப்புகள் எப்பொழுதும் நம்மைக் கவனித்து, நம்மைச் சரியாக புரிந்து கொள்வார்கள். காஃபி வித் காதல் என்பது உறவுகளின் கலவையாகும், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் உடன்பிறப்புகளுடனான மோதல்கள் மற்றும் இனிமையான நினைவுகள் அனைத்தையும் அழகாக சொல்லும் கதை இது. இப்படத்தை காணும் ஒவ்வொருவரும் தங்கள் உடன்பிறப்பை கண்டிப்பாக நினைப்பார்கள். ஜீ5 தளம் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி இந்தக் கதையைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல, இதை விட சிறந்த தளம் இருக்க முடியாது.