மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோப்ரா எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்திருக்கிறது?
காற்று புகாத இடங்களில் கூட புகுந்து மர்டர் பண்ணும் மாஸ் விக்ரம். அவரைப் போட்டுக்கொடுக்கும் ஒரு விக்ரம். மாஸ் விக்ரமை போட்டுத்தள்ள கட்டம் கட்டும் ஒரு வில்லன். விக்ரமை பின் தொடரும் இண்டர்பால் டீம் ஒன்று. இவர்களனைவரும் ஒன்றிணையும் இடமும், முடியும் இடமும் தான் கோப்ராவின் பயணம்
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு விக்ரமை தியேட்டரில் பார்க்கிறோம். ஒவ்வொரு ப்ரேமிலும் பட்டொளி வீசி பறக்கிறது அவரின் நடிப்பு+ எனர்ஜி. வயது என்பது வெறும் நம்பர்ஸ் என்பதை தமிழ்சினிமாவில் விக்ரமைப் பார்த்து தோளைத்தட்டிச் சொல்லலாம். மாஸ் க்ளாஸ், ஆக்ஷன்,எமோஷ்னல், லவ் என எல்லா ஏரியாவிலும் அதகள நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். அவரைத் தவிர திரையில் ஓரளவு ஸ்கோர் செய்கிறார்கள் மியா சார்ஜ், பத்மபிரியா, மிருளாளனி கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர். ஸ்பெசலாக இர்ஃபான் பதான் படம் நெடுக வருகிறார். அவரின் கேரக்டர் ஸ்கெட்ச் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கலாம்.
பாடல்களில் கவனம் ஈர்த்த ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசையில் ரொம்பவே சொதப்பியிருக்கிறார். ஒளிப்பதிவு மட்டும் ஒரு தரமான ஹாலிவுட் படத்தை நினைவுப்படுத்துகிறது. பக்கா ஒளிப்பதிவு.
நிறைய குழப்பங்களோடு பயணிக்கும் கதையை விக்ரம் ஒற்றை ஆளாக தாங்கிப்பிடித்துள்ளார். சியானை இன்னும் மாஸ் ஏற்ற இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அருள் வந்த சாமியாய் கர்ஜிக்கும் விக்ரமிற்காக விசில் போட்டு கொண்டாடலாம் கோப்ராவை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#cobra #கோப்ரா