Tamil Movie Ads News and Videos Portal

சினிமா வியாபாரம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

“எதை விற்கத் தெரியுமோ அதைத்தான் உருவாக்கணும். அவன் தான் ஒரு நல்ல வியாபாரி”. இந்தக் கணக்கு சினிமாவுல மட்டும் செல்லுபடியாகுறதுல்ல. சினிமாக் கணக்கே தனி!

But அதிலுமே ரொம்ப விழிப்புணர்வோடயும், நிறைய்ய அனுபவத்தை வளர்த்துக்கிட்டும் செயல்பட்டா லாபம் கொட்டும். தயாரிப்பாளர்களை வைத்து எல்லாரும் லாபம் பார்க்குற சினிமாவுல, தயாரிப்பாளர்களுக்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் லாபம் உண்டுன்னு 15 வருசத்துக்கு முன்பே தெளிவா எழுதிருக்கிறார் அண்ணன் கேபிள் சங்கர். அவர் சங்கர் நாராயணன் எனும் பெயரில் எழுதியுள்ள புத்தகம் இது.

நூலில் அதி பயங்கர Updated- ஆன தகவல்கள் இப்பவுமே எனக்கு புதுசா இருந்துச்சு. சினிமாவின் விநியோகஸ்தர்களின் பங்களிப்பு என்ன? என்பதை அத்தனைத் துல்லியத்தோடு எழுதியுள்ளார். எப்படி இவ்வளவு தகவல்களை திரட்டுகிறார்? என்றால், சினிமா மேல் இருக்கும் அதிதீவிர பற்று என்பதை நானே பதிலாக்கி கொண்டேன்

ஹாலிவுட் சினிமாக்களின் தயாரிப்பு முறைகளையும், வியாபார முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார். பாலாவின் சேது படத்தை தன் நண்பர்களோடு டிஸ்யூபிசன் பண்ணுவதற்காக ப்ளான் போட்டு, ரேட் படியாமல் விட்ட கதையை நூலில் சொல்லியுள்ளார். அப்படியே சூர்யா ஜோதிகா நடித்த, ‘உயிரிலே கலந்தது’ என்ற படத்தை வாங்கி கையை சுட்ட கதையையும் சொல்லியுள்ளார்.

இந்த நூலைப் போலவே, இப்போதுள்ள சினிமாவை வைத்து ஒரு நூலை கேபிள் சங்கர்ணே எழுதினால் நிறையபேர்களுக்கு பயன்படும். குறிப்பாக முதல்படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை, வேறோர் தொழில் செய்தபடியே, சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தில் படமெடுக்க வரும் தயாரிப்பாளர்களை, ரத்தம் உரிஞ்சும் அட்டையாய் அரித்து பணம் பிடுங்கும் கூட்டம், இப்போது கோலிவுட்டில் நல்லவன் வேசம் போட்டு சுற்றுகிறது. அவற்றை எல்லாம் அடையாளம் காண, ஏதுவாக ஒரு நூல் அவசியத்தேவை. 7 லட்சம் பெறுமான, ஒரு மெட்டிரியலை கூச்சமே இல்லாமல் 11 லட்சத்துக்கு பில் கட்டும் ஒரு கும்பலை சமீமபத்தில் நேரில் கண்டேன். எனக்கு ரஜினி சாருக்கு போல ஒரு நிமிசம் தலையே சுத்திடிச்சு.

‘தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதிக்க இத்தனை வாசல்கள் இருக்கிறது’ என்று பட்டிலிட்ட இந்நூலாசிரியர், “கள்ளக் கதவுகள் வழியாக உள்நுழையும் மாபியாக்களை தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ளவும் ஒரு நூல் எழுத வேண்டும்’

Because ஒரு படம் யாரில்லா விட்டாலும் நடந்திடும். பணம் இல்லாவிட்டால் நடக்காது. So சம்பளமும் வாங்கிட்டு கமிசனும் அடிக்கிற க்ரியேட்டிவ் கூட்டத்தை ஒழிச்சிவிட்டாலே தயாரிப்பாளர்ஸ் பாதி தப்பிச்சிடுவாங்க