V.T ரித்திஷ்குமார் தயாரிப்பில் எல்.ஜி ரவிசந்தர் எழுதி இயக்கியுள்ள “நான் அவளைச் சந்தித்த போது” படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது,
“எனக்கு கைலாசா அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு நான்கு சிஸ்சைகள் தேவை. அதற்கு நடிகர் சாம்ஸ் தான் உதவ வேண்டும். நான் அவளைச் சந்தித்த போது என்ற இந்தப்படத்தின் டைட்டிலைக் கேட்டவுடன் எல்லோருக்கும் பழைய ஞாபகம் வந்துள்ளது. ஆனால் யாருக்கெல்லாம் மனைவி ஞாபகம் வந்துள்ளது என்று தெரியவில்லை. அப்பா பாசம் தந்தை பாசம் உள்ளபடங்கள் பார்க்கும் போது கூட அவர்கள் மீது பாசம் கூடுவதில்லை. ஆனால் காதல் படங்கள் பார்த்தால் காதல் கூடிவிடும். நல்ல லவ் ஸ்டோரிகளைப் பார்க்கும் போது நல்ல காதலைச் செய்யத் தோன்றும். அப்போ வெளிவந்த படங்கள் பெண்களை நல்லவிதமாக பார்க்க வைத்தது. பாக்கியராஜ் சாரின் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நம் மனது கெட்டுப்போக வில்லை. ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு சினிமாவே காரணமாக இருக்கிறது. கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண் பெண் இணைந்து வாழ்வது இப்போது மிகச்சாதரணமாகி விட்டது. பெண்கள் மூன்று வகையால் மாட்டிக்கொள்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையை ஏமாந்து போகிறார்கள். அவர்களைத் தான் பாக்கியராஜ் சார் எச்சரித்து இருந்தார். மெளன கீதங்கள் என்ற படம் மூலமாக தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் பாக்கியராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததிற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. இன்று செல்போனாலே பாதி வாழ்க்கைப் பரிபோகிறது. பெண்கள் அமைப்பிற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். பாக்கியராஜ் சார் பெண்களுக்கான இயக்குநர். இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே நல்லகதை இருக்கும் என்று தெரிகிறது. ஒளிப்பதிவு இசை எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எல்.ஜி ரவிசந்தர் என் நண்பர். எங்கள் சங்கத்தில் அங்கம் வகிப்பவர். இந்தப்படம் அவர் வாழ்க்கையில் நல்ல வெற்றியைத் தரும்” என்றார்