விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி தற்போது இணைய இருக்கிறது. இவர்களோடு தமிழ்த் திரையுலகில் தன் பாடலால் இளைஞர்களை உற்சமாக்கி வரும் அனிருத் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார் அது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சீயான் 60’ படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் ‘மாஸ்டர்’ தயாராகி வருகிறது. அப்படம் விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீயான் 60’ படத்தை தயாரிக்கவுள்ளார். .
‘சீயான்60’ 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.