சின்னப்படங்கள் தான் எங்களுகு லாபம்-அபிராமி ராமநாதன் அதிரடி
நேற்று முதல்முறையாக தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் ஒன்றை மிக மிக அவசரம் டீம் நடத்தியது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு அபிராமி ராமநாதன் பேசியதாவது
“நெல்லிக்காய் போல சிதறிக்கிடந்த எங்களை ஒன்று சேர்த்து, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுக்கோப்பாக கொண்டு வந்தவர் ரோகிணி பன்னீர் செல்வம் தான்.. இந்த 45 வருடங்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி சொல்வதற்கு என ஒரு கூட்டம் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.. இதுதான் முதல்முறை.. நன்றி சொல்லும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு சின்ன படங்கள் தான் காரணம்.. எப்போதும் பெரிய படங்களை விட சிறிய படங்கள் ஓட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம்.. காரணம்.. எங்களுக்கு சின்ன படங்களில்தான் வருமானம் அதிகம் கிடைக்கிறது..
தற்போது இந்த சிறிய படங்களுக்கு இன்னும் உதவி செய்யும் விதமாகத்தான் என்னுடைய நான்கு தியேட்டர்களையும் இடித்துவிட்டு புதிதாக சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டிக் கொண்டிருக்கிறேன் இப்போதுள்ள செய்தித்துறை அமைச்சர் கிடைப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,. பெரிய தியேட்டர்களின் சிரமங்களை கூறி அவற்றை சிறிய தியேட்டர்கள் ஆக மாற்றுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள், நடைமுறை சிக்கல்கள் இன்றி அனுமதி தரவேண்டும் என கேட்டோம். உடனே சம்மதித்து விட்டார்..
அதேசமயம் பெரிய படங்களில் சம்பாதித்தால் தான் சிறிய படங்களை திரையிடும் அளவிற்கு தாக்குப்பிடிக்க முடியும் அதுபோன்ற நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது.. இதோ இப்போது மிக மிக அவசரம் படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.. இந்த ஒரு வாரம் 125 தியேட்டர்களில் ஓடினாலே இந்த படத்திற்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துவிடும்.. தற்போது இணையதளத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி படங்களை எடுத்து நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள் நானும் கூட தற்போது இதில் ஈடுபட்டு உள்ளேன் ஆனால் இந்த இப்படி ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு கூட கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார்