“மீ-டூ” விவகாரத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியதிலிருந்தே அவரை சர்ச்சைகள் சுற்றி சூழ்ந்தவண்ணம் தான் இருக்கிறது. சமீபத்தில் அவரது தாயார் பத்மஹாசினி, “தேவதாசி முறை என்பது இந்த பாரதத்தின் சொத்து, அதை ஒழித்துக் கட்டிய காரணத்திற்காக ஈ.வெ.ரா.பெரியாரை நான் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை..” என்று பேசி இருந்தார். இது
பொதுமக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈ.வெ.ரா.பெரியாரை மன்னிக்க யார் இவர்..? என்று ஒரு சாரரும், உன் மகள் சின்மயியை தேவதாசி ஆகச் சொல் என்று ஒரு சாரரும் வசையில் இறங்க, செய்வது அறியாது திகைத்த சின்மயி, தற்போது அது தொடர்பாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில் அவர், “தேவதாசி முறையை நான் முற்றிலும் எதிர்ப்பவள். அது எனது தாயாரின் கருத்து. அதற்காக என்னை தேவதாசி ஆகச் சொல்வது முறையில்லை. எனது தாயார் பேசியதற்கு அவரே பொறுப்பு. அவரின் பேச்சு காயப்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறி இருக்கிறார்.