Tamil Movie Ads News and Videos Portal

சிக்லெட்ஸ்- விமர்சனம்

பேசப்பட வேண்டும் என்று படமெடுப்பதற்கும் கவனிக்கப்பட வேண்டும் என்று படமெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பேசப்பட வேண்டும் என்பதில் வியாபார நோக்கம் மட்டுமே பிரதானம்..நாம் தவறான கருத்தை விதைத்தாலும் பேசப்படுவோம்..அபத்தத்தை தொட்டாலும் பேசப்படுவோம். ஆனால் கூர்ந்து கவனிக்கப்படும் படைப்பு கூர்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும். இந்தச் சிக்லெட்ஸ் படம் இதில் எந்த வகை?

2K கிட்களின் உடல் வேட்கையைச் சொல்லும் கதையாக இப்படத்தின் ஒன்லைனை லாக் செய்திருக்கிறார் டைரக்டர் முத்து. திருமணத்திற்கு முன்பு செக்ஸ்னா அது கெத்து என்று 2k கிட்கள் சுத்துவதாக இயக்குநர் ரசிகர்கள் காதில் பூ சுற்றியுள்ளார்.

வளரிளம் பருவம் கொண்ட இரு பாலினத்திடமும் செக்ஸ் உணர்வு அதீதமாக மேலெழுவது இயல்பு. அதை மாற்றும் வடிகாலும், அவர்களின் உடலியல் எழுச்சியை ஏற்று அதற்கான உளவியல் டிஸ்கசனை ஏற்படுத்தும் செயல்பாடுகளையும் முன் வைக்கும் படங்கள் தான் இன்றைய தேவை. ஆனால் இயக்குநர் கமர்சியல் ரூட் பிடித்து கதையை எங்கங்கோ கொண்டு செல்கிறார். லெஸ்பியன் பற்றிய ஒரு ஏரியா மட்டும் எமோஷ்னல் பதிவு. மற்றபடி மூன்று பெண்கள் தங்கள் பாய் பிரண்ட்-உடன் உடலுறவு கொள்ள முயற்சிக்கும் கதையெல்லாம் சொன்னவிதத்தில் எடுபடவில்லை

வெறும் உடல் கவர்ச்சியை மட்டும் நம்பி வைக்கப்பட்டுள்ள ஷாட்களும், எழுதப்பட்ட வசனங்களும் ரசனையற்றவை. இசையும் பெரிதாக எடுபடவில்லை

நடித்தவர்கள் அனைவரும் நல்ல நடிப்பை வழங்க முயற்சித்துள்ளனர்.

கமர்சியலாக எதாவது தேத்தி விடலாம் என்று படமெடுப்பது ஓகே தான். ஆனால் அதற்காக எதைப் பேச வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். காமம் என்ற இயல்பான ஒன்றை எதார்த்தம் மீறாமல் அழகியலோடு சொல்லிருந்தால் இந்த சிக்லெட்ஸ் பெஸ்ட் ஒன்-ஆக மாறியிருக்கும்
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்