சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “தர்பார்”. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய இயக்குநர் முருகதாஸ், சந்திரமுகி 2 படக்கதையின் ஒன்லைனர் தன்னிடம் இருப்பதாகவும், அதை தான் ரஜினியிடம் கூறிய போது, அது அவருக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் வேறு வேறு காரணங்களால் அப்படத்தை தொடர
முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, “ஏற்கனவே நான் ”சந்திரமுகி – 2” திரைப்படத்தை கன்னடத்தில் “ஆப்த ரட்சகா” என்ற பெயரில் எடுத்துவிட்டேன். அப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. மேலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை தமிழில் எடுக்க, ஒரு முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பட வேலைகள் விரைவில் தொடங்கும்..”என்று தெரிவித்துள்ளார்.