சுதந்திர தினம் அன்று வயதானவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று விசால் அப்பாவின் அசோக சக்ராவையும் கொள்ளையடித்தச் செல்கின்றனர். காதலை விட அப்பாவின் அந்த அசோகசக்ராவை அதிமாக நேசிக்கும் விஷால் வில்லன் டீமை(மூன்று பேர்தான்) எப்படி சக்ரவியூகம் அமைத்துப் பிடித்தார் என்பதே சக்ராவின் கதை!
படம் துவங்கிய பத்துநிமிடம் திரையில் ரேஸ் நடப்பது போல அப்படியொரு வேகம். இரண்டு பேர் பைக்கில் சென்று ஒவ்வொரு ஏரியாவாக அடிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சூப்பர்ப்!
விஷாலுக்கு இது ஈசியாக வொர்க் அவுட் ஆகிற கேரக்டர் என்பதால் நாட் அவுட் ஆகாமல் அடித்து விளையாடி அசத்தி இருக்கிறார். ஷரத்தாவின் போலீஸ் கதாப்பாத்திர வார்ப்பில் இன்னும் மெனக்கெட்டு அவர் துணிச்சலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவரது புத்திசாலித்தனத்திற்கும் கொடுத்திருக்கலாம். கே.ஆர் விஜயா தனது அனுபவத்தால் அநாயசமாக நடித்துள்ளார். ரோபோ சங்கருக்கு பெரிதாக வேலை இல்லை. யுவனின் இசை சாதா காட்சிகளை கூட ஸ்பெசல் சாதாவாக மாற்றி அசத்துகிறது.
படத்தின் நெகட்டிவ் கேரக்டரில் வரும் ரெஜினா கசன்ட்ரா தூள் கிளப்பி இருக்கிறார். இளமையான அழகான சொர்ணாக்கா! வரும் காலத்தில் நயன்தாரா போல தனி ஹீரோயினாக தனி ஆட்டம் ஆட இவருக்கு வாய்ப்பு இருக்குங்கோ!
முன்பாதியில் திரைக்கதையில் பற்றிய நெருப்பு பின்பாதியில் இன்னும் வேகமெடுத்திருக்கலாம். ஆனாலும் ஒன் டூ ஒன் ஆடுபுலி ஆட்டம் சலிப்பை ஏற்படுத்தாமல் பின்பாதியை ரசிக்க வைத்துவிடுகிறது. சிறுசிறு லாஜிக் மீறல்களையும் படத்தின் வேகம் மேகம் போல மறைத்து விடுவது பெரும் ப்ளஸ்.
Then
எல்லாமே ஆன்லைனில் கிடைக்குறது என்பதற்காக நாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நமது பெட்ஷீட் கலரைக் கூட சொல்லிவிடுகிறோம். அப்படி அவர்களிடம் செல்லும் நமது டேட்டாவிற்கு சரியான சர்வர் செக்யூரிட்டி இல்லை என்றால் அவை நமக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை நெத்தியில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறது. So அதற்காகவே சக்ராவை கொண்டாடி தீர்க்கலாம்
-மு.ஜெகன்சேட்