விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிறது.விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமயத்தில் கொரோனா கால பொது முடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டது. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறும்.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன்.இவர்,
இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
டீசர் வெகுவிரைவில் வெளியாக இருக்கிறது