டெடி வெற்றிக்குப் பிறகு மிகவும் டெடிகேசனோடு உழைத்து ஆர்யாவை கேப்டனாக்கி களம் இறக்கியிருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தரராஜன். கேப்டன் ஜெயித்தாரா?
சிக்கிமர் வனப்பகுதிக்குள் மனிதர்கள் நுழைய முடியாத சூழல் இருக்கிறது..அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய ஆர்யா டீம் களம் இறங்குகிறது. சிம்ரன் அணியும் அதற்கான விடைகளைத் தேடி முடிவு என்ன? என்பதே கேப்டனின் கதை
கதைக்கேற்ற உடலை வடிவமைத்துக் கொள்வதில் ஆர்யாவிற்கு நிகர் யார்யா? என தாரளமாகச் சொல்லலாம். இந்தப் படத்திற்கு தன் உடலை அவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். சிம்ரன் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்ய, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓரளவு கவனம் ஈர்க்கிறார். ஹரிஷ் உத்தமன் கேரக்டர் ஓ.கே ரகம்
கேப்டனை அழகாக காட்டுவதில் கேமராமேன் ரொம்பவே உழைத்திருக்கிறார். போலவே பின்னணி இசையும் தரமாக அமைந்திருக்கிறது. படத்தின் மைனஸாக CG அமைந்திருக்கிறது. பெரிய செட்டப் என்பதால் குவாலிட்டியில் சிறிய கவனப்பிழை நிகழ்ந்தாலும் படத்தின் தரத்தை அது பாதிக்கவே செய்யும்
பேண்டசி கலந்த பெரிய கதையை கையில் எடுத்த இயக்குநர் அதை எளிமையாக எழுதியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அதைச் சிறந்த திரைக்கதையாக மாற்றுவதில் தான் சறுக்கியிருக்கிறார். கேப்டன் நாட் அவுட் என்றாலும் செஞ்சுரி அடிக்கவில்லை
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#captain #கேப்டன்