இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களும் அவர்களின் வேலைகளை அவரவரே செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நடிகர் நடிகைகளும் விதிவிலக்கு அல்ல. வீட்டு வேலைகள் செய்வது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, துவைப்பது, தோட்டவேலை செய்வது’ போன்ற வேலைகளை அவர்களே செய்து அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்த ரகுல் பீரித் சிங் சாலையில் ஏதோ வாங்கி வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதோடு மதுவிலக்குக்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நேரத்தில் அவர் வெளியே சென்று மது வாங்கி வந்தார் என்றும் வதந்தி பரவியது. இதற்கு பதிலாக, “ஓ மெடிக்கல் ஷாப்பில் மது கிடைக்குமா..? இது எனக்குத் தெரியாதே.?” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.