Tamil Movie Ads News and Videos Portal

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ்!

சின்னத்திரை புகழ் விஜே சித்ரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look)ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது. தற்போது வெளிவந்த டீஸர்(Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் டீஸர்(Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான திரு. ஜெ. சபரிஷ் அவர்கள் கூறியதாவது “நம்மிடையே வி.ஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள். என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.