கொரோனா தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பினை விட பட்டினியால் பலரும் இறக்க நேரிடுமோ என்று அஞ்சும் அளவிற்கு நிலை மோசமாகலாம் என்று சில அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இரண்டு நாட்கள் இந்தியா முழுக்க முடங்கியதற்கே இந்த நிலை என்றால் இன்னும் இந்த ஊரடங்கு சில நாட்கள் நீடித்தால் தினக்கூலி தொழிலாளர்கள் வீட்டில் எப்படி அடுப்பு எரியும் என்ற கேள்வி பல சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வருகின்றது.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாக்டர் ராஜசேகர் ‘இது போன்ற பொருளாதார உதவி தேவைப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் உதவி தேவைப்படின் தனக்கு போன் செய்யுமாறு கூறி போன் நம்பரை வெளியிட்டுள்ளார். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்கும் போது, அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, தமிழ் நட்சத்திரங்களும் இது போன்ற அறிவிப்பை வெளியிவார்களா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.