Tamil Movie Ads News and Videos Portal

கடாவர்- விமர்சனம்

தொடர்கொலைகளையும் அவை சார்ந்த விசாரணைகளையும் மையப்படுத்திய கதைகள் என்றால் பார்க்கும் ரசிகர்களுக்கு எப்போதுமே ஓர் பேராவல் ஏற்படும். அந்த ஆவலைத் தூண்டி கனகச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கிறது கடாவர் திரைப்படம்

அமலாபால் உடற்கூராய்வு செய்யும் நிபுணர். ஹரிஷ் உத்தமன் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவதைப்பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அவரின் விசாரணைக்கு அமலாபால் உதவியாக இருக்கிறார். இவர்களின் கண்டுபுடிப்புகள் கொலைகளுக்கான காரணத்தை கண்டுபுடித்ததா என்பதே படத்தின் கதை

அமலாபால் கரியரில் இது மிக முக்கியமான படமாகும். ஹேர்ஸ்டைல் முதற்கொண்டு தன் வழக்கமான பாடிலாங்குவேஜ் வரை சகலவற்றையும் மாற்றி ஒரு மாற்று நடிப்பை வழங்கியிருக்கிறார். ஹரீஷ் உத்தமன் சிறப்பான நடிப்பால் கவர்கிறார். வேலுபிரபாகர், அதுல்யா ரவி உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை

இப்படியான திரில்லர் படங்களுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சரியாக அமையவேண்டும். அதைச் சரியாக அமைத்துக்கொடுத்துள்ளனர் இசை அமைப்பாளர் ரஞ்சின் ராஜினும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கும்

வழக்கமான கொலைகள் விசாரணைகள் எனப் பயணிக்கும் படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட அம்சத்தை கையில் எடுத்த விதத்தில் இப்படத்தின் திரைக்கதை நம்மை ஈர்க்கிறது. இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் கடாவர் மூலம் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். திரில்லர் படங்களை விரும்புகளுக்கு இப்படம் நிச்சயமாக நல் விருந்து

3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்