தீபாவளி ரேஸில் ப்ரோ எந்த இடம் பெற்றுள்ளார்?
‘அக்கா தான் சாமி..வாழுற பூமி’ன்னு நினைக்கிற ஜெயம் ரவி, அப்பா அம்மாவிற்கு புள்ளையாக இல்லாமல் தொல்லையாக இருக்கிறார். நேர்மை என்ற பெயரில் பலரையும் அவர் டயர்டாக்கி வரும் சூழலில், தன் அக்கா பூமிகாவின் வாழ்விலும் ஜெயம் ரவியால் புயல் வீசுகிறது. வீசிய புயலை ஜெயம் ரவி எப்படிச் சமாளித்தார்? என்பதே இந்தப் ப்ரதர்
ஜெயம் ரவி ஆரம்பகாலத்தில் நடிக்க வேண்டிய கேரக்டர் இது. இப்போதுள்ள பொன்னியின் செல்வனுக்கு, இந்தக் கேரக்டரும் பாடிலாங்குவேஜும் செட் ஆகவே இல்லை. பூமிகா கேரக்டர் வடிவமும் சரி, ஹீரோயின் பிரியங்கா மோகன் கேரக்டர் வடிவமும் சரி வீக் ஆகவே எழுதப்பட்டுள்ளது. நட்டியும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயின் அப்பா கேரக்டர் ஓரளவு ஓகே. சரண்யா பொன்வண்ணன், உள்பட பிற கேரக்டர்கள் யாரும் சோபிக்காமல், சோதிக்கிறார்கள்
படத்தில் இசை என்பது வதையாக மாறியுள்ளது. பால் டப்பா எழுதிய ஒரு பாடலைத் தவிர, வேறெதுவும் சரியாக அமையவில்லை. ஒளிப்பதிவிலும் நிறைய சீரியல் தன்மை உள்ளது
கதை, திரைக்கதைக்கு துளியும் மெனக்கெடாமல் வெறும் வசனங்களை வைத்து படத்தை தேத்த முயன்றுள்ளார் இயக்குநர் ராஜேஷ். ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட ஒரு ட்விஸ்ட் தவிர, படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒரு காட்சி கூட இல்லை. பழைய மாவில் சுட்ட தீபாவளி பலகாரம் என்பதால்….படத்தைப் பற்றிச் சொல்ல மேற்கொண்டு எதுவுமில்லை Very Sorry Brother
2/5
தமிழ் வெண்பா