கொரோனா கோரத்தாண்டவத்தை விட கொடூரம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. அதற்கு எதிர்வினையாற்றி ஓர் கடிதம் எழுதி இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிறப்படுகிறது… இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்பட க்கூடாது?
இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்…காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்…
நன்றி…வணக்கம்
போஸ் வெங்கட்.
நடிகர் & இயக்குனர்