‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, தனது தனித்துவமான நடிப்பினால் கவனம் ஈர்த்தவர் நடிகை பார்வதி. அதனைத் தொடர்ந்து தமிழில் சொல்லிக் கொள்வது போன்ற வேடங்கள் அமையவில்லை என்றாலும் மலையாளச் சினிமா இவரின் நடிப்புப் பசிக்கு நல்ல தீனி போட்டது. மலையாளத்தி இவர் நடிப்பில் வெளியான பெங்களூரு டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆஃப், கொடே, உயரே போன்ற படங்கள் இவரின் நடிப்பின் அடுத்த பரிமாணத்தைக் காட்டியது.
படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதில் தன்னை முன்னிறுத்தும் பார்வதி, தன்னை இயக்குநராகவும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய போது, இந்தாண்டு இறுதிக்குள் கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன். அரசியல் சார்ந்த ஒரு கதை, திரில்லர் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. இரண்டில் ஒன்றினை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார்.