Tamil Movie Ads News and Videos Portal

பொம்மை- விமர்சனம்

ஒரு உளவியல் பிரச்சனை இருப்பவர் பொம்மையை உண்மை என நம்பினால் என்னவாகும்? இதுதான் பொம்மை

நாயகன் எஸ்.ஜே சூர்யா பொம்மை செய்யும் கலைஞன். அவர் வடிவமைத்த ஒரு பொம்மையில் சின்ன வயதில் தொலைத்த தன் காதலியைக் காண்கிறார். அந்த பொம்மையை காதலியாகவே பாவித்துப் பேசுகிறார், காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்குச் சின்னதாக நெருக்கடி வந்தாலும் கொலை செய்யும் லெவலுக்குச் செல்கிறார்; கொலையும் செய்கிறார். இப்படியான எஸ்.ஜே.சூர்யாவின் மன பிரச்சனை எப்படி தீர்ந்தது? என்பதே மீதிக்கதை

தேவைக்கு அதிகமான நடிப்பு இப்படத்திற்கு தேவை என்று இயக்குநர் ராதாமோகன் எஸ்.ஜே சூர்யாவிடம் சொல்லியிருப்பார் போல. அதனால் தேவைக்கு அதிகமாகவே நடித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. பொம்மை உயிர்பெறும் போதெல்லாம் வருகிறார் பிரியா பவானி சங்கர். மெழுகு டால் போல் வரும் அவரின் கேரக்டருக்கான பேக் ஸ்டோரி சரியாக எழுதப்படவில்லை. அதனால் அவரது கேரக்டர் வலுவாக இல்லை. இவர்களைத் தவிர சாந்தினி தமிழரசன் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். ஏனைய நடிகர்கள் யாருக்கும் பெரிய ஸ்கோப் இல்லை

யுவன் சங்கர் ராஜா தான் இசை என்பதை நம்பவே முடியவில்லை. படத்தில் எங்குமே அவரது முத்திரை தெரியவில்லை. இளையராஜா இசையில் “தெய்வீகராகம்” என்ற பாடல் படமெங்கும் வந்து ஆறுதல் படுத்துகிறது. ஒளிப்பதிவில் ஆஹா அம்சம் என எதுவுமில்லை. மழைச் சூழலை இன்னும் பிழையின்றி படமாக்கியிருக்கலாம். சில இடங்களில் மழை செயற்கையாகப் பெய்வது அப்பட்டமாக தெரிகிறது

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் மனித மனதின் மென் உணர்வுகள் அழகாக தீண்டப்படும்..இந்தப்படத்தில் அப்படியான வாவ் மொமெண்ட் இல்லை. எஸ்.ஜே.சூர்யாவின் இலக்கும் பிரச்சனையும் நம்மை எங்குமே பாதிக்கவில்லை. படத்தின் பிரதான பிரச்சனைகளில் இது ஒன்று. மனப்பிறழ்வாளரின் பின் கதைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ரசிகனை பொம்மையாக நினைக்காமல் உண்மையாக உழைத்திருந்தால் படம் செம்மயாக வந்திருக்கும். பச்….
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Bommai #பொம்மை