குவைத் அரசால் குற்றம் சாட்டப்பட்டு தூக்குமேடைக்கு ஏற இருக்கும் இரு தமிழர்களை 27.30 மணி நேரத்தில் ஒரு மீடியா இளைஞியால் காப்பாற்ற முடிந்ததா என்பதே Blood money படத்தின் கதை
மிகச்சிறப்பான லைன் என்பதில் மாற்றமே இல்லை. குவைத் அரசைப் பொறுத்தவரை.. கொலை செய்தவர் கொலையுண்ட குடும்பத்திற்கு “தவா” எனப்படும் ப்ளட்மணி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்த பின் கொலையுண்ட ஆளின் குடும்பம் கொலைகாரனை மன்னித்துவிட்டோம் என்று ஒரு கடிதம் கொடுத்தால் தூக்கு தண்டனையில் இருந்து கொலையாளி தப்பிக்கலாம்.
நிச்சயமாக இக்கதை புத்தம் புதுசு. ஆனால் இவ்விசயத்தை திரையேற்றும் இடத்தில் இயக்குநர் சின்னதாக சறுக்கி இருக்கிறார்.
ப்ரியாபவானி சங்கர் சுகந்தியாக வரும் சிறுமி, உள்பட படத்தில் யாரும் செயற்கையாக நடிக்கவில்லை. ஆனால் கதையின் நகர்வில் செயற்கை இருக்கிறது. விஷுவல் குவாலிட்டி நன்றாக இருக்கிறது. சில சிஜி ஷாட்களை இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்
விசயத்தைப் புதுசாக யோசித்தவர்கள் கொடுக்கும் விதத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் படத்தில் மணி கொட்டியிருக்கும். ஒரு வித்தியாசமான அட்டம்ப்ட் என்ற வகையில் படத்தை இந்த வீக் என்டில் ஒருமுறை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்
-மு.ஜெகன் கவிராஜ்