Tamil Movie Ads News and Videos Portal

Blacksheep நிறுவனத் தூதராக “வைகைப் புயல் ” வடிவேலு!

பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்துவந்த Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான ‘BLACKSHEEP TV’ உடன் நவம்பர் 6,2022இல் நிறுவனத் தூதராக “வைகைப் புயல் ” வடிவேலுவை இணைத்து, அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது. Fiction மற்றும் Non fiction என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கூட்டாக இந்த தொலைக்காட்சியானது பலதரப்பட்ட இளம் சமூகத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தூதரான வைகை புயல் வடிவேலு குறித்து விக்னேஷ்காந்த் பகிர்ந்ததாவது,

வைகைப்புயல் வடிவேலு என்பவர் ஒரு பல்திறன் வாய்ந்த மனிதர். நமது எலும்புகளையும் தன் கலைத்திறனாலும் நகைச்சுவையாலும் சிரித்துணர செய்து, மீம்ஸ் படைப்பாளர்களின் அமிர்தமாக மிளிர்ந்து, பொழுதுபோக்கு உலகையே ஆள்பவறாக திகழ்கிறார். அவரது பல்வகை நகைச்சுவை திறன்களால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே உள்ளார். நாமும் நமது BLACKSHEEP தொலைக்காட்சியை அதே வடிவமைப்பில் வளர்த்து வருவதனால், அவர் மட்டுமே நமது தொலைகாட்சியின் மிகப் பொருத்தமான சின்னமாக இருக்க முடியும் என உணர்ந்தோம்.” என்றார்.

ஆதிகாரப்பூர்வமாக நவம்பர் 2022இல் இருந்து blacksheep தொலைக்காட்சி இயங்கும், நேயர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு தொகுப்புகளை வழங்கும். திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் உடனான உரையாடல் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம், இத்தொலைகாட்சியானது, இளம் தலைமுறை மற்றும் குடும்பத்தினருக்கான ஒருமித்த இலக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

#Blacksheep