எப்போதுமே சர்ச்சையில் அடிக்கடி மாட்டிக் கொண்டு தவிப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் கூட மாநாடு திரைப்படம் தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சை அடங்கி, தற்போது தான் மீண்டும் படக்குழு இணைந்து பட வேளைகளை தொடங்கி இருக்கிறது. படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மீண்டும் சிம்பு படப்பிடிப்பிற்கு கால தாமதமாக வருவது,
தேவையில்லாமல் பிடிவாதம் பிடிப்பது என்று படப்பிடிப்பிற்கு தடங்கல் ஏற்படுத்துவதாக தகவல்கள் சில நாட்களாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்துமே சிம்புவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்துடனோ அல்லது “மாநாடு” படத்தினை கைவிட வேண்டும் என்கின்ற எண்ணத்துடனோ பரப்பப்படும் விஷயங்கள். இந்த இரண்டும் கனவிலும் நடக்கப் போவது இல்லை; ஏனென்றால் அவர்கள் திட்டமிட்டு பரப்பும் தகவல்களில் துளியும் உண்மையில்லை” என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.