பிரத்மார்க்- விமர்சனம்
கர்ப்பிணி பெண்ணின் உளவியலைப் பேசும் சினிமா
இப்படி ஒரு மையம் இருக்கிறதா? எனக் கேட்கும்படி ஒரு மையம். கருவுற்றிருக்கும் பெண்களை சுகப்பிரசவமாக குழந்தையை பெற்றெடுக்க வைக்கும் ஒரு மையம். அங்கு தன் மனைவியை வந்து சேர்க்கிறார் ஹீரோ. அங்கு சேர்ந்துள்ள மனைவிக்கு நேர்கிற உளவியல் சிக்கல்களும் கணவன் செய்யும் பல துன்பியல் நிகழ்வுகளும் தான் படத்தின் கதை
ஹீரோ அளவெடுத்த சட்டையாக இக்கதைக்குள் பொருந்திப் போகிறார். மிர்ணா தான் ஏற்றுக்கொண்ட மனைவி கேரக்டரில் நம் நாட்டின் பல பெண்களை பிரதிபலிக்கிறார். அச்சு அசலாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் மிர்ணா. படத்தில் மொத்தமே ஆறேழு கேரக்டர்கள் தான் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்
தன் விரல்களில் பாச உணர்ச்சியை ஊற்றி இசை அமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர். மனதுக்கு அவ்வளவு நெருக்கமான இசையை அவர் வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் தன் பணியை செவ்வனே செய்துள்ளார்
இப்படியான கதையை எழுதுவதற்கும் அதை படமாக்கவும் பெரும் மன முதிர்ச்சி வேண்டும். அந்த முதிர்ச்சியை மேக்கிங்கில் காட்டியுள்ளார் இயக்குநர். முழுமையான கலை நேர்த்தி கூடி வரா விட்டாலும் காலை வாரி விடாத அளவிற்கு நல்லபடம் இது. வித்தியாசமான முயற்சிகளை வரவேற்க நினைப்பவர்கள். பிரத்மார்க்குக்கு கூடுதலாக ஒரு மார்க் போடலாம்
-3/5
-மு.ஜெகன் கவிராஜ்