Tamil Movie Ads News and Videos Portal

‘பெடியா’ படத்தில் பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடல்!

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் அமர் கௌஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் ‘பெடியா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘தும்கேஸ்வரி’ தற்போது வெளியாகியுள்ளது. கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் – கீர்த்தி சனோன் கூட்டணி பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாடலை பற்றி வருண் தவான் கூறுகையில், “இது போன்ற ஒரு உற்சாகமான பாடலுக்கு நடனமாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது. நடனமாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பாடல் இது. பாடலின் இசையும் அதன் வரிகளும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்,” என்றார். சிறப்புமிக்க இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஷ்ரத்தா கபூர் நடனமாடியுள்ளார். சிகப்பு ஆடையில் வருணுடன் இவர் போட்டுள்ள ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

#Bhediya #பெடியா