இயக்குநர் பாரதிராஜா கொரோனா தொற்று நோயைத் தடுக்கப் போராடும் மருத்துவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார். மேலும் பாரதிராஜா கூறி இருப்பதாவது,
“உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்.
நன்றி,
பாரதிராஜா