Tamil Movie Ads News and Videos Portal

ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..!

அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில் சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார்.இப்படம் 80% முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி இறுதியில் நடக்க இருக்கிறது.இந்த பகவான் திரைப்படம் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படமாகும்.