எதுக்கும் அலட்டிக்காத மனசை கைப்பத்தணும்னா வாழ்க்கையில நிறைய மல்லுக்கட்ட சமாளிச்சவனா இருக்கணும். அப்படி சமாளிச்சி, அனுபவங்களை அள்ளி அந்த மனசை எட்டிப்பிடிக்குமுன்ன வயசும் எட்டப்போயிரும். வயசு இருக்கும் போதே மனசை லேசா மாத்துற வித்தையத் தான் கீதை சொல்லித்தருது. அந்தக் கீதையை ருசியா பருக வாலி இந்த நூலைத் தந்திருக்கார்.
மணலிபுதுநகர் அய்யா கோவில் இணைத்தலைவர் இறந்து போன தேவதாஸ் அய்யா கூட தஞ்சாவூர் போயிருக்கும் போது கையிலே பகவத் கீதை கொண்டு போயிருந்தேன்..அவரோட வயல்ல உக்காந்து பல நாட்களா இருந்து படிச்சு சேர்த்தேன் கீதையை. அர்த்தமுள்ள இந்துமதத்துல கண்ணதாசன், “கீதையைப் படித்தால் நிம்மதி கிடைக்கும்” னு சொல்லிருந்தார். அதை மனசுல வச்சு கீதையைப் படிச்சேன்..அப்ப பெருசா மண்டையில ஏறல, மனசுல உக்காரல. இப்ப வாலியோட இந்த கவிதை வடிவகீதை லேசா மண்டையையும் மனசையும் துவட்டி விட்டுச்சு.
வாலியோட பலமும் பலவீனமும் சொற்கள் தான். ஒரு நல்ல ரைமிங் கிடைக்கணும் என்பதற்காக சில வாக்கியங்களை வம்படியா அமைப்பார் வாலி. சிலது இயல்பாக வந்து அமையும். “வாலியின் வார்த்தைகளில் கற்கண்டின் சுவையிருக்கும்” னு கலைஞர் ஒரு பேட்டியில சொல்லிருந்தார். அது நிஜம் தான். சிலநேரம் ஓவர் டோஸ் ஆவதும் உண்டு. But எனக்கு வாலி எப்போதும் ஆதர்சம் தான்
எல்லாத்துக்கும் எல்லாம் ஆனவன் இறைவன், அதை அர்ஜுனனிடம் சொல்வதாக வாலி சொல்றார் , “இருப்பவை யாவையும் இயற்றுவது இயற்கை- அந்த இயற்கையை பின்னிருந்து இயக்குவது இறைக்கை”
மற்றொரு இடத்தில், “முதல் முதல் – ஒரு
முதல் இன்றி முளைத்து வந்த முதல் நான்” என்ற வாலியின் வரிகளில், “நீ பிறவாத பிறப்பில்லை உன்னைப் பிறப்பித்தார் எவருமில்லை” என்ற பரிபாடல் வரிகள் நினைவுக்கு வந்தது
இதைச் செய்தால் அது நடக்கும் என்ற எண்ணத்தை விட்டொழிக்கும் போது கவனம் பலனில் இல்லாது செயலில் மட்டுமே இருக்கும். ஒத்த கவனம் கொண்ட செயல் நிச்சயமாக பெரிய பலனை எட்டிப்பிடிக்கும். இந்த சூட்சமம் சொல்லும் கீதை, “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யச் சொல்கிறது”
அதை வாலி,
“எதையும் பயில்;
எதற்கும் முயல்;
பலன் தருவதும் தராததும் தெய்வத்தின் செயல்” என்கிறார்
வாலி வெத்தலையைப் போட்டு துப்புமுன்ன ஒரு சரணம் சொல்லுவார் என்பார் இயக்குநர் சங்கர். இந்த நூல் முழுதும் கிருஷ்ணனின் சரணம் இருக்கிறது. சில இடங்களில் வர்ணம் பற்றிய அரசியலும் இருக்கிறது. ஆயினும் சோ வின் முன்னுரையை விட வாலியின் கவியுரையில் சாதிச்சாயம் இல்லை
இருக்கும் உயிர் என்றேனும் இறக்கும்
இறக்கும் வரையில் நிச்சயம் உயிர் இருக்கும். ஆக இருக்கும் வரையில் மனம் இறக்காமல் மனம் இரந்து வாழ்வோமாக🙏என்பதை கீதை மூலம் உணரலாம்.
Final touch
வாலி ஸ்டைல்ல சொல்ல ட்ரை பண்றேன்
“life கலைகின்ற அலங்காரம்-
வேண்டாம் பிழைகொண்ட அகங்காரம்”