Tamil Movie Ads News and Videos Portal

பீஸ்ட்- விமர்சனம்

தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட மால் ஒன்றில் உள்ள மக்களை ரா உளவாளியான விஜய் எப்படி காப்பாற்றினார்? என்பதே பீஸ்டின் கதை

ஒன்லைனில் இருக்கும் எனர்ஜியை படத்தில் கொண்டுவர தடுமாறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். படத்தில் விஜய் மிக அழகாக இருக்கிறார். பாடல்களில் துள்ளல் என்றால் ஆக்‌ஷனில் மெர்சல் காட்டுகிறார். ப்ளாக் ஹியூமர் விஜய்க்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. வழக்கமான விஜய் இதில் இல்லாவிட்டாலும், இதற்கு வழக்கமான விஜயே பரவாயில்லை என நினைக்க வைத்துவிட்டார் நெல்ஸ். படத்தில் யோகிபாபுவை விட வி.டிவி கணேஷ் காமெடி பல இடங்களில் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. பூஜா ஹெக்டே அழகுப்பதுமையாக இருக்கிறார். செல்வராகவன் நடிகராக தமிழ்சினிமாவிற்கு நல் வரவு

படத்தின் டெக்னிக்கல் டீம் மொத்தத்திற்கும் பெரிய சல்யூட்! ஒவ்வொரு டெக்னிஷியன்ஸும் அவ்வளவு பிரம்மிக்க வைத்துள்ளனர். குறிப்பாக அன்பறிவ் ஸ்டண்ட் சீக்வென்ஸஸ். அரபிகுத்து பாட்டில் இருந்த மேஜிக் பின்னணி இசையிலும் இருக்குது..நச் நச்னு தெறிக்குது அனிருத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர்

படத்தில் லாஜிக் என்பதை மருந்துக்கு கூட கடைப்பிடிக்கவில்லை இயக்குநர் நெல்சன். நேரமும் பணமும் திரும்ப வராது என்ற புரிதலோடு இந்தப்படத்தை அணுகியிருக்க வேண்டும். படத்தில் வில்லன் கேரக்டர் வீக் ஆக இருப்பதால் ஹீரோவிற்கு வரும் சவால்கள் எல்லாம் இடைவேளையில் சாப்பிடும் சமோசா போல சப்னு ஆய்டிச்சு. படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் என்பது மருந்திற்கும் இல்லை. விஜயை வைத்து கதகளி ஆடியிருக்கலாம்..நெல்சனோ வீடியோகேம் ஆடியிருக்கிறார்

-மு.ஜெகன் கவிராஜ்