கொலையை கலையாகச் செய்யும் ஒரு கொலைகாரனின் கதை
ஜெயிலில் இருக்கும் ஒரு கொலைகாரனிடம் அவன் கொலைகள் செய்ததிற்கான காரணங்களை கேட்கிறார் எழுத்தாளராக வரும் வினோத் சாகர். கொலைகாரன் தான் செய்த கொலைகள் பற்றி விவரிக்கிறான். மாறன் என்பவரின் சொற்படி தான் கொலைகள் செய்ததாகவும், கொலைகளில் பெரும் அழகியலை தான் அனுபவிப்பதாகவும் அவன் சொல்கிறான். அவையெல்லாம் காட்சிகளாக விரிகிறது. கதை சொல்லி வெவ்வேறு நபராக கொலை செயல்களில் வருகிறார்
நடிகர்களில் ஹீரோ சில ப்ரேம்களில் ஓகேவாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் பிரித்தெடுத்துள்ளார். விஷ்வாகாந்த் நல்ல நடிப்பையும், ஹரிஷ் உத்தமன் நல்ல நடிப்பையும் வழங்கியுள்ளனர். எழுத்தாளராக வரும் வினோத் சாகருக்கு அந்த வேடம் பொருந்தவில்லை
படத்தில் கேமராமேன் பல வித்தியாசமான கோணங்களை வைத்துள்ளார். சில ஷாட்கள் ரசிக்க முடிகின்றன. பின்னணி இசையில் கே பல முதிர்ச்சியான முயற்சிகளை செய்துள்ளார். ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் போஸ்ட் புரொடக்சனில் சவுண்ட் எபெக்ட், கலரிங் என டெக்னிக்கலாக படம் சிறப்பு.
முக்கியமாக எதுக்கு இப்படியொரு கதை? என்ற கேள்வி படம் பார்க்கும் பலருக்கும் தோன்றியிருக்கும். கொலைகள் செய்வதை முன்னுதாரணமாக கொண்டு திரியும் ஒரு நாயகன் நமக்கு எதுக்கு? கடைசியில் இப்படியெல்லாம் நடந்திருந்தால் அவன் கொலைகள் செய்யாதிருந்திருக்கலாம் என்ற சப்பைக் கட்டு வேறு. அதெல்லாம் வேலைக்கே ஆகவில்லை. ‘நெட்ப்ளீக்ஸ் கன்டென்ட் தல’ என யாரோ இயக்குநரை ஏத்தி விட்டிருப்பார்கள் போல. இலக்கியமோ திரைக்கதையோ எதுவாக இருந்தாலும் எளிமை தான் அதன் அழகு. எளிய ரசிகனுக்கும் தாம் சொல்ல வருவது புரியவேண்டும். அதை சுத்தமாக இயக்குநர் மறந்துவிட்டார் போல
கொலையை கலையாக செய்கிறேன் என்று கலையை கொலை செய்துள்ளனர்
2.25/5
-மு.ஜெகன் கவிராஜ்