Tamil Movie Ads News and Videos Portal

பாரம் படம் தேசியவிருது பெற்றதைக் குறித்து ராம் கருத்து

பிரியா கிருஷ்ணசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் பாரம். இப்படம் பல திரைப்பட விழாக்களில் பல்வேறு பாராட்டுப் பட்டயங்களைப் பெற்றுள்ளது. மேலும் சென்றாண்டின் தேசியவிருதையும் இப்படம் பெற்றுள்ளது. வரும் 21-ஆம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை வெளியிட இருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. விழாவில் வெற்றிமாறன், மிஷ்கின், ராம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் ராம் பேசியதாவது,

“தேசியவிருது பெற்றதால் ஒருபடம் நல்ல படம் என்றும் கிடையாது. தேசியவிருது கிடைக்காததால் ஒருபடம் மோசமான படமும் கிடையாது. பாரம் படம் நல்லபடம். இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படத்தை நான் கோவாவில் பார்த்ததும் வெற்றிமாறனுக்குத் தான் போன் போட்டேன். நான் போன் போட்டதும் எடுக்கக் கூடியவர் அவர் மட்டும் தான். அவருக்கு நன்றி” என்றார்