Tamil Movie Ads News and Videos Portal

ஏ.பி.ஷியாம் லெனின் இயக்கத்தில் “பேச்சிலர்ஸ்”

திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் லெவின் சைமன் ஜோசப், சாதிகா வேணுகோபால், ஷியாம் சீத்தல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். லெவின் சைமன் ஜோசப் இதற்கு முன்பு மலையாளத்தில் ” பட்டிலாம்பரா” மற்றும் தமிழில் “அமுதா” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

உறவுகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை, மதிப்பின்மையை பற்றி “பேச்சிலர்ஸ்” திரைப்படம் பேசுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க கொச்சின் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாக்டவுன் காலத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

ஜெசின் ஜார்ஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அகில் அலியாஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். மது மாதெஸரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுதீஷ் ஆண்டிகோட்டி, ஷாஜி சுரேஷ், விஷ்ணுமாயா, மாது M.P, ஷியாம் லெனின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.