Tamil Movie Ads News and Videos Portal

பேச்சுலர் – விமர்சனம்

படத்தின் கதை இளசுகளின் அங்க ஈர்ப்பு சார்ந்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் சார்ந்தும் என்பதால் இப்படத்தின் விமர்சனத்தை வேறு வடிவில் பார்ப்போம். அதாவது ஒரு நல்ல ரசிகனின் வாய்ஸ் இது…

ஒரு நல்ல மேட்டர் கிடைச்சும் லென்த் மேட்டர்ல கொஞ்சம் மெயின் மேட்டரை கோட்டை விட்டதால தான் ஆடியன்ஸுக்கு டோட்டல் மேட்டரும் தப்பா தெரியுது ஆக்‌ஷுவலா மேட்டர் என்னன்னா, இந்தப்படத்துல ஹீரோ மேட்டரே கிடையாது. பார்க்கிங் மேட்டர் உள்பட சிலபல மேட்டர்களுக்கு மட்டுமே அவர் பயன்படுறார்.

இது பக்கா ஹீரோயின் சென்ட்ரிக் படம் என்பது தான் முதல் மேட்டர். இந்த மேட்டரை அப்படியே புரஜெக்ட் பண்ணி ஆடியன்ஸ் மைன்ட்ல ஏத்திருந்தா…ரசிகன் இதை ஹீரோயின் படமா நினைச்சே பார்க்க வந்திருப்பான். நிச்சயமாக அவனுக்கு படம் தரமான மேட்டரா தெரிஞ்சிருக்கும்

ஒரு படத்தோட தலைமை கதாப்பாத்திரத்தை தான் ஆடியன்ஸ் பாலோ பண்ணுவான் என்ற மேட்டர் எல்லாருக்கும் தெரியும். பேச்சுலர்ல அந்த மேட்டர்ல தான் பிசிறு. ஹீரோ சைட்ல எவ்ளோ மேட்டர்களை அடுக்கினாலும், “ச்சீ நீயெல்லாம் ஒரு மேட்டரே கிடையாதுடா” என்ற மனநிலைக்கு ஆடியன்ஸ் வந்துட்டதால, படத்துல என்னடா எல்லா மேட்டரும் சப்புன்னு இருக்குன்னு ரசிகன் நினைச்சிட்டான்… அதான் சோகமான மேட்டர்

தேனி ஈஸ்வர் கேமரா தான் டெக்கனிக்கல் மேட்டர்ல நம்மை “அட செம்ம மேட்டர்பா”னு சொல்ல வைக்குது
“தந்தானே தந்தன தானே”ன்ற ட்யூன்ல வர்ற பாட்டும் மேக்கிங்கும் ஆகா..அது அசத்தல் மேட்டர்
கொங்குத் தமிழை கொண்டா கொண்டான்னு ரசிக்க வைச்ச மேட்டரும் செம்ம மேட்டர்

ஒரு முக்கியமான மேட்டரை கட் பண்ற ஆசாமியா வர்ற மிஷ்கின் கேரக்டர் பண்ற மேட்டர் எல்லாமே வெடிச்சி சிரிக்கிற வெறித்தன மேட்டர் முன்னாடியும் பின்னாடியும் சில மேட்டர்களை எடுத்துட்டு 2.30 மணி நேரத்துல இந்த மேட்டரைச் சொல்லிருந்தா இந்தப்பேச்சுலர் ஒரு அட்டகாசமான படமா வந்திருக்கும்…

குறிப்பிட வேண்டிய இன்னொரு மேட்டர், ஹீரோயின், பக்ஸ், முனிஷ், நண்பர்களா வர்ற எல்லாரும் கொடுத்த மேட்டரை உள்வாங்கி அப்படியே நடிச்சிருக்காங்க…படம் ரொம்ப லைவான மேட்டரா இருந்ததால எங்கள் டீமிற்கு ” இந்த மேட்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது என்பது தனிப்பட்ட மேட்டர்

-மு.ஜெகன் கவிராஜ்