Tamil Movie Ads News and Videos Portal

அயலான்- விமர்சனம்

பூமியை அழிக்க வரும் ஏலியன் வந்தா அது ஹாலிவுட் படம். பூமியை காக்க ஏலியன் வந்தா அது அயலான் படம்

பூம்பாறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் எஸ்.கே பொழைப்பு தேடி சென்னை வருகிறார். கருணாகரன், யோகிபாபு & கோவுடன் அடைக்கலமாகும் சிவாவின் வாழ்வில் ஒரு ஏலியன் வருகிறான். அவன் வருவதற்கான காரணம் பூமி அழித்தொழிப்பை காப்பதாக இருக்கிறது. சிவாவும் ஏலியனும் சேர்ந்து இப்பூமியை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக விரிகிறது படத்தின் திரைக்கதை

சிவகார்த்திகேயன் நடிப்பில் துளி குறையுமில்லை. ஆட்டம் பாட்டம் சண்டை என பக்கா கமர்சியல் பேக்கேஜ் அவர். சரியாக பயன்படுத்தியுள்ளார். ஏலியனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சித்தார்த் வாய்ஸ் நச் ரகம். ரகுல் ப்ரீத்திசிங் கேரக்டர் படத்தோடு சிங் ஆகியிருப்பது பேராறுதல். யோகிபாபு, கருணாகரன் கேங் காமெடிக்கு கியாரண்டி தருகிறார்கள்..அவர்களின் கேரக்டர் வழியே கதையின் ஒரு முக்கியமான சீக்வென்ஸை நகர்த்தியது நல்ல புத்திசாலித்தனமான ஸ்கிரீன் ப்ளே. வில்லன் கேரக்டர் வொர்த்தாக வடிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை அட்டகாசமாக படத்தோடு பொருந்தியுள்ளது. படத்தில் இரு பாடல்கள் மனதில் நிற்கிறது. தேர்ந்த ஒளிப்பதிவு படத்தின் கூடுதலான அழகியல். இந்தப்படத்தின் அடிநாதம் வரைகலை (GC) தான்..அதைத் திறம்பட செய்துள்ளார்கள். செய்த செலவிற்கான வொர்த் திரையில் சிறப்பாக தெரிகிறது. சின்னச் சின்ன ஆச்சர்யங்கள் படத்தின் விஷுவலில் இருப்பதால் படம் என்கேஜிங் ஆகவே இருக்கிறது. பூமியை நாம் காப்பாற்ற வேண்டாம். அதை தண்டிக்காமல் இருந்தாலே போதும். அது நம்மை கண்டிக்காமல் இருக்கும். மேலும் ஒரு வேற்றுக்கிரகவாசியின் பார்வையில் நாம் வாழும் பூமியை விமர்சன பூர்வமாக அணுகியிருப்பது நல்ல மெத்தெட். கொடைக்கானல் பூம்பாறையில் இருந்து சென்னை வரும் ஹீரோவிற்கு நடக்கும் சர்ப்ரைஸ் சம்பவங்கள் எல்லாம் ஆடியன்ஸோடு பக்காவாக கனெக்ட் ஆகிறது. தேர்ந்த வரைகலை, தொய்வில்லாத திரைக்கதை, சிறப்பான ஸ்டார் காஸ்டிங், தரமான மேக்கிங் என இந்த அயலான் பொங்கலை வென்றான்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்