Tamil Movie Ads News and Videos Portal

”அவதார் 2” வெளியான புகைப்படங்கள்

உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் எனும் சாதனையை நெடுநாள் வரைக்கும் தன்னகத்தே வைத்திருந்த திரைப்படம் “அவதார்”. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படத்தின் வசூல் சாதனை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிற படங்களால் நெருங்கக்கூட முடியாத இடத்தில் இருந்தது. சமீபத்தில் வெளியான ’அவெஞ்சர்ஸ் என்ட் கேம்” திரைப்படம் தான் இப்படத்தின் சாதனையை சிறிதளவிற்கு முந்தியது.

தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தோடு நிறைவடைந்தது. மீண்டும் இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் 21ல் வெளியாகவிருக்கும் இப்படத்தின் விஸ்வல்ஸ் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக அதன் ஒளிவண்ணப் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அப்புகைப்படங்களே மிரள வைப்பதால், படத்தில் காட்சியாக அவற்றைப் பார்க்கும் போது, அவை மேலும் மிரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.