Tamil Movie Ads News and Videos Portal

அவர்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன் – ராதிகா ஆப்தே

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்த ராதிகா ஆப்தே. பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துபவர். இவர் 2015ம் ஆண்டு பதல்பூர் என்கின்ற படத்தில் நடித்திருந்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றதோடு ஒரு சேர விமர்சனங்களைப் பெற்றார். ஏனென்றால் அப்படத்தில் சில ஆபாசக் காட்சிகளும் பல ஆபாச வசனங்களும் இடம் பெற்றிருந்தது தான் அதற்கு காரணம். இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ராதிகா ஆப்தே “பதல்பூர் படும் சமூகத்தில் ஏன் கொலை கொள்ளை போன்ற செயல்கள் நடக்கின்றன என பல சமூக அவலங்களைப் பேசிய படம். அதை எல்லாம் விட்டுவிட்டு அதிலிருந்து என்னுடைய கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதே போன்ற கதாபாத்திரத்தை வேறு கதைகளில் வைத்துக் கொண்டு என்னை நடிக்கக் கேட்டு பல இயக்குநர்கள் வருகின்றனர். அவர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உணர்கிறேன். வேறு என்ன சொல்வது..?? பதல்பூர் திரைப்படத்தில் அது போன்ற காட்சிகள் படத்தின் கதைக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அதனால் தான் எந்தவித பதட்டமும் இன்றி நடித்தேன்.” என்று கூறியுள்ளார்.