ஆத்தீ! கைதி படத்தின் வசூல் இவ்வளவா?
தீபாவளி ரேசில் கைதி பிகில் என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே வெற்றி என ட்ரேடிங் வட்டாரத்தில் அறிவித்தாலும் கைதி படம் தான் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 10 நாள்களை கடந்துவிட்ட நிலையில் படத்தின் துல்லியமான வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. 25 கோடிகள் அளவில் தயாரிக்கப்பட்ட கைதி படம் 50 கோடி ரூபாய் வரை பிஸ்னெஸ் ஆகி இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 32 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தி இருக்கிறது. விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்துடன் மோதி கார்த்தி படம் இப்படியொரு வெற்றியைப் பெற்றிருப்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கைதி பேமிலி ஆடியன்ஸ்க்கான படம் கிடையாது. ஆனாலும் விஜய்டிவி நிர்வாகம் இப்படத்தை 10 கோடி ரூபாய் கொடுத்து சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கி இருக்கிறது. ஆக இந்த தீபாவளி ரேசில் கைதி அசுரத்தனமாக வசூல் வேட்டையாடி இருக்கிறது.